நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ‘போகோஹாரம்’ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேற்கத்திய கலாசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்கள் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவிகள் சுமார் 300 பேரை கடத்தி சென்றனர். கடந்த 3 வாரத்துக்கு மேலாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அப்பெண்களை, பாலியல் தொழிலுக்கு விற்கப்போவதாகவும் தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று போகோஹாரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த வடக்கு நைஜீரியாவில் ஹில்லி ருவோஷா என்ற கிராமத்தில் 2 வாகனங்கள் மற்றும் லாரிகளில் தீவிரவாதிகள் புகுந்தனர். வீடுகளுக்குள் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து வந்தனர். பின்னர் இவர்களில் 8 சிறுமிகளை இழுத்து சென்று லாரிகளில் ஏற்றி கடத்தி சென்றனர். இதனால் பதட்டம் அடைந்த மக்கள் சிறுமிகளை மீட்க வாகனங்களின் பின்னால் ஓடினார்கள். ஆனால் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள் தப்பி சென்று விட்டனர். கடத்தப்பட்ட சிறுமிகள் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள்.
இந்நிலையில், அமெரிக்காவின் உதவியை அதிபர் குட்லக் ஜோனாதன் நாடினார். அதை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘‘கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்க போவதாக தீவிரவாதிகளின் தலைவர் பேசிய பேச்சு இதயத்தை நொறுக்குவது போல் உள்ளது. சர்வதேச அளவில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் இதுபோன்ற கொடூரத் தனத்தை சகித்து கொள்ள முடியாது. எனவே கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க அமெரிக்கா ராணுவ வீரர்களுடன் ஆன ஒரு குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது’’ என்றார்.
இளம் மாணவிகளை மீட்கும் பணியில் உயர் தொழில்நுட்ப உதவிகளை செய்ய உள்ளதாக சீனா மற்றும் பிரிட்டன் நாடுகளும் தெரிவித்துள்ளன. இது குறித்து சீன அரசு செய்தி நிறுவனம் சினுவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நைஜீரிய இளம்பெண்களை மீட்கும் பணியில் சீனா உதவ இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விகாரத்தில் சீன செயற்கைகோள்கள் கண்டறியும் தகவல்களை நைஜீரிய பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜோனத்தானிடம் சீன அதிபர் லீ கெகியாங் கூறியுள்ளார்.
இதேபோல் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் நைஜீரியாவுக்கு உதவ முன்வந்துள்ளார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.