ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 திருத்தி அமைக்கப்படும் என்ற மோடியின் வாக்குறுதியை குறிப்பிட்டு, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, அவ்வாறு நடந்தால் அது இந்தியா என்ற கூட்டமைப்புக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் இடையே பாலமாக உள்ள அரசியல் சாசனத்தை சிதைப்பதாகிவிடும் என தெரிவித்தார்.
அதே போல், புத்த மதத்தவர் அதிகம் வசிக்கும் லடாக் பகுதிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதியையும் ஒமர் கடுமையாக விமர்சித்துள்ளார். "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை பிரிக்கும் இத்தகைய முயற்சிகள் மோசமான விளைவுகளை தரும். இதனால் மாநிலத்தில் மத அமைதிக்கு பங்கம் ஏற்படும், உறவுகளில் விரிசல் ஏற்படும். பெரும்பாலான இந்திய மக்களுக்கு இத்தகைய விளைவுகள் குறித்து இன்னும் புரிதல் ஏற்படவில்லை என தோன்றுகிறது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த போதும், சட்டப்பிரிவு 370-ஐ திருத்தி அமைப்பது பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், கூட்டணி கட்சிகளின் கொள்கைளுக்கு மரியாதை அளித்து அந்த யோசனையை வாஜ்பாய் புறக்கணித்ததார். வாஜ்பாயும் - நரேந்திர மோடியும் வெவ்வேறு சிந்தனைகள் கொண்டவர்கள் என்றார். மேலும், வாஜ்பாய் - நரேந்திர மோடி இருவரையும் சமநிலையில் வைத்து ஒப்பிட்டு பார்க்கமுடியாது. மோடி பச்சை பொய்களையும், பாதி உண்மைகளையும் வைத்து வியாபாரம் செய்பவர் என்று ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.