நாகை மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் செந்தில் சென்னையில் ஒரு பேன்சி ஸ்டோரிலும் இளைய மகன் சதீஷ் உள்ளூரிலிலேயே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலையும் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி விற்றதில் கிடைத்த லாபத்தில் 500 ரூபாயை குடும்பத்துக்குத் தெரியாமல் சதீஷ் செலவு செய்திருக்கிறார். இது தெரிந்த நாகராஜன் மகனை கண்டித்திருக்கிறார்.
தந்தை தன்னை திட்டி விட்டாரே என்கிற வருத்தத்தில் மனம் உடைந்த சதீஷ், விஷம் அருந்திவிட்டு வீட்டில் வந்து படுத்து விட்டார். இரவு 2 மணியளவில் அவர் வாந்தி எடுத்தபோது விஷம் அருந்தியது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சதீஷை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
மகன் விஷம் குடித்து கிடக்கும் நிலையில் எழுந்திருக்காமல் படுத்துக் கிடக்கும் நாகராஜனை எழுப்பியபோதுதான் தெரிந்தது, அவரும் விஷம் அருந்தி இறந்து கிடந்தது. வீட்டில் தந்தையும், மருத்துவமனையில் மகன் சதீஷும் இறந்தார்கள். வியாழக்கிழமை தந்தை மகன் இருவருக்கும் இறுதி சடங்கு நடைபெற்றது. பிறகு, வீட்டில் இருந்தது நாகராஜனின் மனைவி ராஜலட்சுமியும், செந்திலும்தான். இருவரும் என்ன பேசினார்கள்? எப்படி இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சனிக்கிழமை காலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது, அவர்கள் இருவரும் உத்தரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போயிருந்தது தெரியவந்தது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.