பிரபல தாவர விஞ்ஞானி சஞ்சயா ராஜராம் தன்னுடைய கோதுமை ஆராய்ச்சியினால் இந்த உலகில் கோதுமை வளர்ச்சியை அதிகப்படுத்தியதால் உலக உணவு பரிசை கைப்பற்றினார் .
இந்த விருதை உலக உணவு பரிசிற்கான வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் புதங்கிழமை அறிவித்தார் . இந்த விருதை அவர் கோதுமை பயிரை வளப்படுத்த செய்த ஆராய்ச்சிக்காகவும் , உலகில் கோதுமை உற்பத்தியை அதிகப்படுத்தியதற்காகவும் சஞ்சயா ராஜராமுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக எம்.எஸ்.ஸ்வாமிநாதன் தெரிவித்தார் .
சஞ்சயா ராஜராம் 480 வகையான கோதுமை வகைகளை கண்டறிந்துள்ளார் . இந்த 480 வகை கோதுமை பயிர்கள் 51 நாடுகளில் சிறு மற்றும் பெரிய விவசாயிகளால் பயன்படுத்தப் படுகிறது .
இந்த உலக உணவுப் பரிசு முதன் முதலாக 1986 ஆம் ஆண்டு போர்லாக் என்பவரால் வழங்கப்பட்டது . உலக மக்களின் பசியைப் போக்க சிறப்பாக ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.