வெளியவாடா பார்த்துக்கிறேன், கிரவுண்டை தாண்டிவிடுவியா, ஆஸ்திரேலியா-நெதர்லாந்த் மேட்சில் நடந்த அடிதடிகள்
Wild World Cup Clash என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு ஆஸ்திரேலியா-நெதர்லாந்த்போட்டியில் வீரர்களிடையே அடிதடிகள் நடந்தன.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தோற்றாலும் ஜப்பான் அணி டீசண்ட்டாக விளையாடி பெயர் வாங்கியது என்றால் நேற்று நடந்த ஆஸ்திரேலியா-நெதர்லாந்த் போட்டியில் வீரர்களுக்கு இடையே அடிதடி.
வேண்டுமென்றே மோதுதல், ஓடும் போது கால் இடுக்கில் கால் விடுதல், காலை தட்டி விடுவது , இடிப்பது, அடிப்பது என நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியினர்கள் கால்பந்து மைதானத்திலேயே மோதிக்கொண்டனர், அது மட்டுமின்றி வெளிய வா பார்த்துக்கிறேன் என்று ஆரம்பித்து மைதானத்தை தாண்டிவிடுவியா என்ற ரேஞ்சில் சவால் மோதல்களும் நடந்தன, ஆங்கில கெட்டவார்த்தையான F*** நிமிடத்திற்கு ஒன்று என வீரர்கள் வாயிலிருந்து விழுந்து கொண்டிருந்தது போட்டி முடிந்த பின்னும் கூட இந்த சண்டைகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இவர்கள் தான் இப்படி என்றால் இவர்களை ஒழுங்கு படுத்த வேண்டிய பயிற்சியாளர்களோ ஒரு படி மேலே போய் இவனை அடி, அவனை அடி என்று கத்திக்கொண்டிருந்தார்கள். நடுவர் பலமுறை எச்சரித்தும் போட்டி முழுவதும் மோதல்கள் தொடர்ந்தது, ஒழுங்கு நடவடிக்கையாக 2 ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்த போட்டியில் விளையாட முடியாது.
ஆஸ்திரேலியா 18 ஃபவுலும் நெதர்லாந்து 25 ஃபவுலும் செய்தார்கள்,
கடைசியில் 3-2 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்து வென்றது, ஆனாலும் சண்டை முடிந்த பாடில்லை, மேட்சிற்கு பின்பும் கூட இரு அணியினரும் திட்டிக்கொண்டனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.