BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 June 2014

தமிழக ஆளுநர் , கர்நாடகாவிற்கும் ஆளுநர் ஆகிறார் !!


தமிழக ஆளுநராக இருப்பவர் ரோசய்யா . கர்நாடகத்தில் ஆளுநராக இருப்பவர் ஹம்சராஜ் பரத்வாஜ் . இவருடைய பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது . . இதனால் தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு கூடுதல் பொறுப்பாக அந்த மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என குடியரசு தலைவர் கூறியுள்ளார் .

ஏற்கனவே மத்திய அரசு மற்ற மாநிலங்களின் ஆளுநர்களை பதவி விலக வலியுறுத்தி வந்த நிலையில் , இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இதைப்போல திரிப்புரா மாநில ஆளுநரும் நாளை ஓய்வு பெற உள்ளார் . அந்த மாநிலத்தின் பொறுப்பு மிசோரா மாநில ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது . 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media