நேற்று காலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கூரையில் இருந்து கண்ணாடி நொறுங்கி கீழே விழுந்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது . பயணிகளின் உடைமைகளை சரி செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்தது .
விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் இதை பார்த்தவுடன் அச்சத்தில் ஓடினர் . விமான நிலையம் கட்டிய காலத்தில் இருந்து இது போன்ற விபத்து நடப்பது இரு 21 வது முறையகும் .
இதை சரிபடுத்தி , மீண்டும் இதே போன்ற விபத்து நடக்காமல் தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்குவதாக தெரியவில்லை . சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.