BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 June 2014

நான் பிறந்தவுடன் என்னை சுமையென்று சொன்னார்கள் - ஸ்மிருதி இராணி உருக்கமான பேச்சு !!


புதியதாக அமைந்துள்ள மத்திய அரசில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஸ்மிருதி இராணி . இன்றைக்கு நடந்த பத்திரிக்கை சந்திப்பில் உருக்கமாக பேசினார் .

அவர் கூறுகையில் , " நான் இதை இதுவரை யாரிடமும் பகிர்ந்தது இல்லை , ஆனால் இப்போது கூறுகிறேன் . நான் பெண் குழந்தையாக பிறந்ததால் சிலர் என் தாயாரிடம் என்னை சுமை என்று கூறினர் . ஆனால் என் தாய் அதைஎல்லாம் கண்டு கொள்ளாமல் என்னை திடமாக வளர்த்தார் . அவர் என்னைக் கொல்லவில்லை அதனால் இன்று உங்கள் முன்னால் நான் இப்போது இப்படி நிற்கிறேன் . பெண் கரு அழிப்பு நடப்பதை தடுக்க வேண்டும் . ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுத்தால் அது அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல , ஒரு குடும்பத்தையே காக்கும் என்றார் .

தேசிய அளவில் ஒரே கல்வி முறை என்பதை பற்றி கேட்ட கேள்விக்கு , " இந்த பிரச்சனைகள் தேசிய கல்வி கொள்கை மூலம் தீர்க்கப்படும் . மத்திய அரசு கல்வி மட்டும் அன்றி திறன் மேம்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்த இருக்கிறது . தேசிய கல்வி கொள்கை அனைத்து மாநில அளவு , தேசிய அளவு , வட்டார அளவில் உள்ள பிரச்சனைகளை பார்த்த பின் வகுக்கப்படும் என்றார் .

மேலும் அனைத்து மாணவர்களும் தங்கள் அறிவை விரிவாக்கிக் கொள்ள விரைவில் தேசிய அளவில் இணைய நூலகம் அமைக்கப்படும் என்றார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media