BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 July 2014

பெங்களூரு - இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் , பாலியல் கொடுமைகளின் தலைநகரம் ஆகி வருகிறதா ???



பெங்களூரில் நடந்த ஆறு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்முறை இந்தியா முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது . இதைப் போன்று கடந்த 15 நாட்களில் 12 பாலியல் கொடுமைகள் பெங்களூரில் நடந்துள்ளது . ஆனால் அரசு நடவடிக்கையை அதிகரிக்காமல் இன்னும் மெதுவாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது .

ஆறு வயது சிறுமிக்கு நடந்த இந்த கொடுமையை முதலில் காவல்துறையினர் அந்த கண்டு கொள்ளவில்லை . பின்னர் சிறுமியின் பெற்றோர் மற்ற பெற்றோர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியப் பின்னர் தான் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர் . முதலில் வெளி நபர் தான் இதை செய்த்தாக தெரிவித்தனர் . ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர் ஒருவரை குற்றவாளியாக கைக் காட்டியது . இது போன்று அந்த பள்ளியில் இருந்து மூன்று முறை குழந்தைகளை கொடுமை செய்ததாக பூகார் கொடுத்த போதும் காவல்துறையினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .


மாநில அரசும் இப்போதுள்ள பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்காமல் , இதற்கு முந்தைய அரசு இவ்வாறான பிரச்சனைகளை சரியாக சமாளிக்கவில்லை என்று குறை கொண்டு இருக்கின்றனர் . இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு இப்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக இருக்கிறது . 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media