மலேசியன் ஏர்லைன்ஸை சேர்ந்த விமானம் ஒன்று தாக்குதல் படையால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது . இந்த விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இறந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
அந்த விமானத்தில் உலக புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர் மற்றும் சர்வதேச எய்ட்ஸ் சங்கத்தின் முன்னால் தலைவராக இருந்த ஜோப் லேங்கும் பயணம் செய்துள்ளார் . அவர் மெல்பர்னில் நடைபெற உள்ள எய்ட்ஸ் - 2014 என்னும் கலந்தாய்வில் கல்ந்து கொள்ள விமானத்தில் பயணம் செய்தார் . இவருடன் எத்த்னை நபர்கள் பயணித்தனர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை . சிட்னியில் உள்ள அதிகாரிகளின் கணிப்பு படி 100 ஆராய்சியாளர்கள் பயணித்திருக்கலாம் .
ட்ரெவர் ஸ்டெடான் என்னும் மற்றுமொரு எய்ட்ஸ் ஆராய்சியாளர் கூறுகையில் , " அந்த விமானத்தில் புகழ்பெற்ற மற்றும் தேர்ச்சி பெற்ற ஆராய்சியாளர்கள் இருந்தனர் . அவர்களிடம் எய்ட்ஸ் நோய்க்கான மருந்து இருந்திருக்கலாம் , ஆனால் அதை உறுதியாக கூற முடியாது என்றார் .
மற்றுமொரு பிரபல ஆராய்சியாளர் கூறுகையில் , " ஒரு துறையில் பிரபலமான ஒருவரை இழக்கையில் , அந்த இழப்பு அந்த துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் . அவருடைய அறிவை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது . நாங்கள் உலக தலைவர் ஒருவரையும் , இளம் ஆராய்ச்சியாளர்களையும் இழந்து உள்ளோம் என்றார் .
ஜோப் லேங்கின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . எய்ட்ஸ் நோயை எதிர்க்கும் மருந்தை கண்டுபிடிக்க அவர் ஆற்றிய பணிகள் நிறைய உள்ளது . எய்ட்ஸ் நோயின் சிகிச்சைக்காக தனது வாழ்வை அர்பணித்து இருந்தார் . அவர் இந்த ஆராய்ச்சியில் 1983 முதல் ஈடுபட்டு வருகிறார் .
இவருடைய இழப்பு ஆராய்சியாளர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை உண்டாக்கி இருந்தாலும் , அவர்கள் துவண்டு விடக் கூடாது , அவரின் ஆராய்சிகளை வைத்து அவரது கனவு மருந்தான எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மருந்தை கண்டுபிடித்து அவரது கனவை நனவாக்க வேண்டும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.