BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 July 2014

பெண்களிற்கு மிகவும் பிடித்தது 'கிஸ்' தானாம், 'கிஸ்' தர மறந்துவிடாதீர்கள் ஆண்களே!

\
இன்றைய காலகட்டத்தில் கிஸ் அடிப்பது என்பது காதலர்கள் , கணவன் மனைவிகள், உறவுகள், நட்புகள் இடையே அன்பு பரிமாற்றத்தின் வெளிப்பாடாக காணப்படுகிறது. சமீபகாலங்களில் காதலர்கள்,கணவன் மனைவி மட்டுமின்றி நண்பர்களிடையேயும் முத்தம் கொடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது, அந்தவகையிலே முத்தம் கொடுப்போரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முத்தம் பற்றி சமீபத்தில் நியூயார்க் நகரத்தின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவு அனைவரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. என்ன ஆச்சரியம் என்றால் முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவமே, தங்கள் துணையின் முத்தத்திற்கு பெண்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

காதலை, அன்பை உறுதிப்படுத்தவும் நீண்ட உறவைப் புதுப்பிக்கவும் முத்தம் கொடுக்கின்றனராம். ஆண்களை பொறுத்தவரை முத்தம் என்பது ஆசை அதிகரிக்கும் போது வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகவே கருதுகிறார்களாம். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

தங்கள் துணையுடனான‌ வாழ்க்கை காலம் நீள நீள முத்தத்தின் முக்கியத்துவம் ஆண்களிடம் குறைகிறது. ஆனால் பெண்களிடம் அது மேலும் மேலும் அதிகரிக்கிறது. ஆண்களே உங்கள் கவனம் முத்தத்தில் இருந்தால் பெண்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள் , தாமதம் வேண்டாம். தயக்கம் வேண்டாம். உங்கள் துணையின் நேசத்தை அவ்வப்போது முத்தம் கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

சாதாரண நேரங்களில் முத்தமிடுவதற்கு ஏற்ற இடம் என்றால் அது நெற்றி, கன்னங்கள், பின் கழுத்து, முன் கழுத்து, உதடுகள், வாய்,. கண்கள், உள்ளங்கை, தோள்கள், அதே செக்ஸ் உறவு நேரங்களில் முத்தமிட ஏற்ற இடம் என்று எதுவுமில்லை, எல்லா இடங்களுமே முத்தமிட ஏற்ற இடங்கள் தான்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media