கடந்த வியாழக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு தாக்கப்பட்டது. இதில் பயணம் செய்து கொண்டு இருந்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி கட்டைகளாக இருந்தனர். இந்த தாக்குதல் உக்ரைன் பகுதியில் நடந்தது. இதற்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. இதனை செய்ததாக உக்ரைன் அரசும் ரஷிய அரசும் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருகிறார்கள்.
உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகனையை பயன்படுத்தும் அளவுக்கு பயிற்சி கிடையாது. எனவே இதனை செய்தது ரஷிய அரசு தான் என்கிறது உக்ரைன் அரசு. ஆனால் உக்ரைன் அரசு எல்லாத்தையும் செய்து விட்டு தேவையில்லாமல் தங்கள் மீது அபண்டமாக பழி போடுவதாக ரஷிய அரசு உக்ரைன் மீது குற்றம்சாட்டி உள்ளது. இப்படி ஒருவரை ஒருவர் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருவதால் செய்தவர் யார் என்று தெரியவில்லை.
இது குறித்து மலேசிய பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த விபத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். இந்த விஷயத்தில் நீதி கடைபிடிக்க பட வேண்டும். இது தொடர்பான முழுமையான விசாரணைக்கு இந்தியா உதவும் என மோடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.