மோடி பதவியேற்றபின் இரண்டு முறை வெளிநாட்டு பயணங்கள் சென்றுள்ளார் . முதலில் பூடானிற்கும் பின்னர் பிரேசிலுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் . இரண்டு பயணங்களிலும் பத்திரிக்கையாளர்கள் யாரையும் அழைத்துச் செல்லாமல் , அரசி ஊடகமான தூர்தர்ஷன் மற்றும் ஏர் இந்தியா வனொளியில் பணியாற்றும் 4 பேரை மட்டும் அழைத்துச் சென்றார் .
ஏன் பிரதமர் மோடி அவ்வாறு செய்தார் என்பதற்கான காரணங்கள் வெளிவந்துள்ளனர் .
1 ) தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் , செய்தியாளர்கள் பிரதமர் அருகில் இருந்தால் தான் செய்தியை சேர்க்க முடியும் என்று இல்லை . இருந்த இடத்தில் இருந்தவாறே அங்கே நடப்பது குறித்த செய்திகளை அறியலாம் . எனவே தகவல் தொழில்நுட்பத்தில் அதிக நம்பிக்கை கொண்ட மோடி பத்திரிக்கையாளர்களை தவிர்த்து உள்ளார் .
2 ) இது போன்ற இடங்களுக்கு 30 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால் , மற்ற 100 பேர் புறக்கணிக்கப்படுகிறார்கள் .
3) மேலும் வேறு எதாவது பெரிய அறிவிப்பாக இருந்தால் , மோடி அதனை இந்தியாவுக்கு வந்த பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுவார் . எனவே அவருடன் வெளிநாட்டுப் பயணங்களில் அவர் பத்திரிக்கையாளரை அழைத்துச் செல்லவில்லை .
இதை மோடி அவர்களே ஒரு மூத்த பத்திரிக்கையாளரிடம் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.