BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 20 July 2014

ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் "பி-டீம்" , சொல்லுகிறது காங்கிரஸ் !!



டில்லியில் யார் அடுத்து ஆட்சி அமைப்பது என்பதற்கு பாஜக , காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது . இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் இன்னொரு கட்சியை தாக்கி குறை சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் . நேற்று காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான ஹருன் யுஸப் ,  ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் "பி-டீம்" என்றார் .

அவர் கூறுகையில் , " ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் "பி-டீம்" , அது பாஜகவிற்கே உதவி செய்கிறது . கெஜ்ரிவால் டில்லியை பிரிக்க பார்க்கிறார் . அவர் ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுகிறார் " என்றார் .

மற்றுமொரு காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில் , ஜன் லோக்பால் நிறைவேற்ற முடியாததாலும் , ஊழலை ஒழிக்க முடியாததாலும் , கெஜ்ரிவால் குப்பை அரசியலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார் . ஆம் ஆத்மி காங்கிரஸின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர நினைத்தது . அது வீணாகப் போனதால் , எங்களை குறை கூற ஆரம்பித்து விட்டனர் என்றார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media