மலேசிய வெடித்து விழுந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை கிளர்சியாளர்கள் தூக்கிச் சென்று விட்டதாக உக்ரேன் அவசர உதவி மைய அதிகாரிகள் தெரிவித்தனர் . '
அங்கே இருந்த பத்திரிக்கை நிரூபர் ஒருவர் கூறுகையில், சனிக்கிழமை அவர் கிளர்சியாளர்கள் உடல்களை வண்டியில் ஏற்றுவதை பார்த்ததாக கூறினார் . இன்று அவர் எந்த உடல்களையும் பார்க்கவில்லை என்றும் உடல்களின் பாகங்களை மட்டும் பணியாளர்கள் தேடிக் கொண்டு இருப்பதாக கூறினார் .
உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர் கூறுகையில் , அவர்கள் எங்களை மிரட்டியதால் உடலை ஒப்படைத்து விட்டோம் . அவர்களிடம் ஆயுதம் இருந்ததால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றார் .
உடலை எதற்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்பது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.