நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் , ஜெர்மணி அணி கோப்பையைக் கைப்பற்றியது . இந்த முறை ஜெர்மணி அரசினர் உலக கோப்பை முடியும் முன்னரே உலக கோப்பை வெற்றியை பறைசாற்றும் விதமாக அஞ்சல் தலை ஒன்றை அச்சடித்து தயராக வைத்து இருந்தனர் . இந்த அஞ்சல் தலை நேற்று முதல் விற்பனைக்கு வந்தது .
ஜெர்மணி நாட்டு அரசினர் அவர்கள் காலிறுதிப் போட்டிக்கு முன்னரே அவர்களின் வெற்றியைக் கணித்து இந்த அஞ்சல் தலையை தயார் செய்ய திட்டமிட்டனர் . இந்த அஞ்சல் தலையில் எந்தவொரு வீரரையும் குறிப்பிட்டு காட்டாமல் மொத்த ஜெர்மணி அணியையும் குறிப்பிடும்படி அஞ்சல் தலையை வடிவமைத்தனர் .
இது குறித்து ஜெர்மணி அணியின் நிதி அமைச்சர் கூறுகையில் , " இந்த முறை ஜெர்மணி அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் அஞ்சல் தலையை உருவாக்கினோம் . எங்கள் நம்பிக்கையை தகர்க்காமல் அவர்கள் கோப்பையை பெற்று தந்தது எங்களுக்கு வியப்பாக உள்ளது . ஒரு வேளை தோற்று இருந்தால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கும் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.