நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூரி நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சுட்டு தாக்கப்பட்டது. இது யாருடைய செயல் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியாகினர். இந்த தாக்குதல் உக்ரைன் அருகே நடந்து உள்ளது. இந்த வழியாக பிரிக்ஸ் மாநாட்டை முடித்து விட்டு மோடி வருவதாக இருந்தது.
மோடி ஏர் இந்தியா 001 என்னும் விமானம் மூலம் இந்தியா நோக்கி வந்து கொண்டு இருந்தார். அந்த விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அந்த பாதையில் தாக்குதல் நடத்தப்பட்டது மோடி வந்து கொண்டு இருந்த விமானத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . இதனை புரிந்து கொண்ட அந்த விமானத்தின் பைலட் புத்திசாலித்தனமாக விமானத்தை வேறு பாதையில் செலுத்தினார். இதனால் அந்த விமானத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதலுக்கு காரணம் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என்று கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.