மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனின் சுழலில் சிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அவரது பந்து எவ்வாறு வரும் என்பது கணிப்பது மிகவும் கடினம். ஒரு எவ்வளவு சிறப்பாக பந்து வீசினாலும் சூப்பர் ஒவரில் அவரது பந்துவீச்சில் அடிக்க தான் செய்வார்கள். ஆனால் சுனில் நரைன் அதிலும் ரன் எதுவும் கொடுக்காமல் மெய்டன் ஆக்கி சாதனை புரிந்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த ஒவரில் ஒரு விக்கெட்டும் எடுத்தார். இது பலரும் அதிர்ச்சியடைய வைத்தது.
கரீபியன் பிரிமியர் லீக் நடைபெற்று வருகிறது. சுனில் நரைன் கயானா வாரியர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ரெட் ஸ்டீல் அணிக்கு எதிரான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஸ்கோர்கள் சமநிலையில் இருந்தன . இதனால் ஆட்டம் சூப்பர் ஒவருக்கு சென்றது. முதலில் பேட் செய்த கயானா வாரியர்ஸ் அணி 11 ரன்கள் எடுத்தது. அடுத்த வந்த ரெட் ஸ்டீல் அணி நரைனின் பந்து வீச்சில் திணறியது. முதல் 4 பந்துகளில் ரன் எடுக்கவில்லை. 5 வது பந்தில் விக்கெட் எடுத்தார். கடைசி பந்திலும் ரன் எடுக்கவில்லை.
எனவே சுனில் நரைனின் அபாரமான பந்துவீச்சால் கயானா வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.