இன்று நெல்சன் மண்டேலாவின் 96 வது பிறந்த நாள் ஆகும். இவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த கறுப்பின மக்களுக்காக போராடியவர். சுமார் 27 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டு பின்பு தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அந்த நாட்டின் அதிபராக 1994-99 வரை இருந்தார்.
தென் ஆப்பிரிக்காவின் தந்தை என அழைக்கப்படுபவர் இவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இறந்தார். இவர் நோபல் பரிசு , இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது என பலவற்றை வாங்கி உள்ளார்.
இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவரை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் அவரை பற்றிய டூடளை வெளியிட்டு உள்ளது. இதில் அவரை பற்றிய சிறந்த கருத்துகள் இடம் பெற்று உள்ளன.
* அடுத்த மனிதனை அவனது நிறம் , மதம், அவனது வாழ்க்கை ஆகியவற்றால் வெறுப்பதற்காக எந்த மனிதனும் பிறக்கவில்லை.
* அடுத்த மனிதனிடம் எப்படி அன்பு காட்டுவது என்பதை ஒருவனுக்கு எளிதில் சொல்லி தர முடியும். ஏனென்றால் அவனுக்கு இயற்கையாகவே ஒருவனை வெறுப்பதை விட அவனிடத்தில் அன்பு காட்டுதல் எளிதாக வரும்.
இன்று கறுப்பின் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு முக்கிய காரணமான நெல்சன் மண்டேலாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.