BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 18 July 2014

செக்ஸ் நேரத்தில் பெண்களுக்கு ஆண்கள் மீது பிடித்ததும் பிடிக்காததும்

செக்ஸ் உறவுக்கு முன்பு ஆண்களிடம் உங்களுக்கு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய பட்டியலையே கொடுப்பார்கள். அதில் முக்கியமானது செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியானதாக  பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி கருதுவதில்லை, அதை மனதோடும் தொடர்பு படுத்தி உண்மையான உடல் மற்றும் மன இன்பத்தை அனுபவிப்பவர்கள்
பெண்கள். உடலும், மனதும் இணையும் உறவாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.

செக்ஸின் போது மியூசிக்? எதுக்கும் கேட்டுக்குங்கப்பா

சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான லயிப்பைத் தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை பரவ விடுங்கள்.

செல் போன் பேச்சி, செக்ஸின் போது போச்சி

இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே 'செல்'லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே 'ஆன்' செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக 'அந்த' நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது. அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.


ஐஸ், தாஜா, கெஞ்சுவது நோ நோ, ஸ்டெரெயிட்டா மேட்டர்க்கு வா

பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள். எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம். எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாகஆக்கிரமிக்க முடியும். செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.

நோ அவசரம், நிதானமே முக்கியம்

மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ, அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும். முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் - அது ரொம்ப ரொம்ப முக்கியம். உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் 'சித்தாந்தம்' பேசுவதை விட்டு விட்டு 'செக்ஸி'யாக பேசுவதற்கு முயலுங்கள்.

எல்லவற்றுக்கும் பெர்மிஷனா? தூக்கி போடுங்க‌

எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு 'பெர்மிஷன்' கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும். மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும். இப்படி சின்னச் சின்னதாக நிறைய உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தெளிந்து செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media