BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 18 July 2014

கன்னியாகுமரியை தமிழகத்தில் இருந்து பிரித்து கொடுக்க வேண்டுமாம் , சொல்லுகிறது காங்கிரஸ் !!!


நேற்று தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரியை தமிழகத்தில் இருந்து பிரித்து அதை ஒரு யுனியன் பிரதேசமாக அறிவிக்கும் படி  அந்த கட்சியின் எம்.எல்.ஏ க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

நேற்று நடந்த தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகள் மீதான விவாதம் நடைபெற்றது . அந்த விவாதத்தில் அனைத்து எம்.எல்.ஏ க்களும் கலந்து கொண்டனர் . தங்களுக்கு பேச அனுமதி கிடைக்கும் என காத்து இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது . அவர்களுக்கு பேசவே அனுமதி கொடுக்கப்படவில்லை . இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களான விஜயதாரணி . பிரின்ஸ் , ஜான் ஜக்கேப் ஆகியோர் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து சபாநாயகரிடம் முறையிட்டனர் . பின்னர் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர் .

இது குறித்து ஜான் ஜேக்கப் கூறுகையில் , " நாங்கள் 3 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் , எங்கள் மாவட்டத்தில் சாலைகள் மோசமாக உள்ளது , இதுகுறித்து நாங்கள் பேசிவிடுவோம் என்று எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . கன்னியாகுமரி மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கொதிப்படைந்துள்ளனர் . எனவே , கன்னியாகுமரியை தமிழகத்தில் இருந்து பிரித்து தனி யுனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க போகிறோம் என்றார் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media