ரயில்வே சேவை மக்களுக்கு தரமானவையாக இருக்க வேண்டும் என மோடி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்காக ரயில்வே துறையின் மூலம் 10 அம்ச திட்டங்களை அறிவித்து உள்ளார்கள். அவை,
* ரயில் நிலையங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
* மெயில்,எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் நேரமும், சென்றடையும் நேரமும் சரியாக கடைப்பிடித்தல் இருக்க வேண்டும்.
* பயணிகளுக்கு தரப்படும் போர்வைகள் தரமானவையாக இருக்க வேண்டும்.
* காத்திருப்போர் பட்டியல் அதிகம் உள்ள ரயில்களின் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் இருக்க வேண்டும்.
* ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரமானவையாகவும் சரியான விலையிலும் விற்கப்பட வேண்டும்.
* நேரில் சென்று டிக்கெட் எடுப்பவர்களுக்கு வசதியாக தானியங்கி இயந்திரம் ரயில் நிலையங்களில் வைக்கப்படும்.
* விவசாயம் சமந்தமான பொருட்களை ரயிலில் எடுத்து செல்வதற்கு அனுமதி அளித்தல்.
* ரயில் பயண நேரத்தை முடிந்த அளவு குறைத்தல்.
* குளிர்சாதன பெட்டிகளில் குளிர்சாதனங்கள் தரமானவையாக இருக்க வேண்டும். அது சீரான குளிர்ச்சியை தர வேண்டும்.
* சுரங்க பாலம் திட்டங்களை நெடுஞ்சாலை துறையினர் உதவியுடன் விரைந்து முடித்தல்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.