உலகின் முன்னனி நிறுவங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணி செய்பவர்களில் 18,000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்ய உள்ளது . இது அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் 14 சதவீதம் ஆகும் . இந்த ஆட்குறைப்பு இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்ட நோக்கியா நிறுவனத்தில் கடுமையாக இருக்கும் . நோக்கியா நிறுவனத்தில் வேலை செய்யும் 12,500 பேர் வேலை விட்டு நீக்கப்படுவர் .
இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா எழுதிய கடிதத்தில் , இந்த வேலைக்க்குறைப்பு நிறுவனத்தின் வேலை யூனிட்களை ஒன்றினைக்கவும் , முன்னேற்ற பாதை நோக்கி முன்னேறவும் உறுதுணையாக இருக்கும் . முதல் கட்டமாக 13,000 பேரின் வேலையை விட்டு நீக்க உள்ளோம் . வேலையை விட்டு நீக்கம் செய்ய உள்ளவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குல் தகவல் தெரிவிக்கப்படும் . மேலும் இது குறித்த அடுத்த தகவலை விவரமாக ஜூலை 22 ஆம் தேதி அறிவிப்பதாக கடிதத்தில் கூறி இருந்தார் .
நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பின்ன மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 1,27,000 பணியாளர்கள் பணி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.