ஈராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்து இருந்த இந்திய நர்சுகளை முந்தைய தினம் விடுவித்தனர் . நேற்று அவர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்தனர் . பின்னர் அவர் அவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
திரும்பி வந்த அவர்கள் அளித்த பேட்டியில் , பெரும்பாலானோர் கூறியது , " ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை " என்று தான் கூறினர் . கேரளத்தைச் சேர்ந்த சாண்ட்ரா செபாஸ்டியன் கூறுகையில் , " ஈராக்கிற்கு திரும்பி செல்லும் பேச்சுக்கே இடமில்லை , எங்கள் உயிரை பணயம் வைக்க நாங்கள் தயாராக இல்லை என்றார் . மேலும் கிளர்ச்சியாளர்கள் அவர்களை சகோதரிகள் என்று தான் அழைத்ததாக கூறினார் .
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மெரீனா ஜோஸ் என்னும் நர்ஸ் கூறுகையில் , " கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை . அவர்கள் ரமலானுக்கு நோன்பு இருந்த போதும் எங்களுக்கு உண்ண உணவு கொடுத்தார்கள் . அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் . உயிருடன் இந்தியா திரும்புவோம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை . எங்களை பத்திரமாக மீட்ட மத்திய அரசு , மாநில அரசு , அதிகாரிகள் , ஊடகங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.