சச்சின் டெண்டுல்கர், இவர் இந்தியாவில் கடவுளாக மதிக்கப்படுபவர். சச்சின் மறுபெயர் என்னவென்றால் அது சாதனை தான். இவர் செய்யாத சாதனைகளே இல்லை. கிரிக்கெட் தெரியாதவர்களுக்கு கூட சச்சினை தெரியும். அவர் நேற்று மேலும் ஒரு புதிய சாதனையை படைத்து உள்ளார். அதாவது கடைசியாக விளையாடிய ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி, ஐபிஎல் போட்டி, சாம்பியன்ஸ் லீக் போட்டி, முதல் தர போட்டி மற்றும் நேற்று நடந்த காட்சி போட்டி என அனைத்திலுமே தனது அணிக்கு வெற்றியை தேடி தந்து உள்ளார். அதன் விவரம் கீழே உள்ளது.
*. கடைசி டெஸ்ட் போட்டி : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் இதில் 74 ரன்கள் எடுத்தார்.
*. கடைசி ஒருநாள் போட்டி : பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் இதில் 52 ரன்கள் எடுத்தார்.
*. கடைசி டி20 போட்டி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் இதில் 10 ரன்கள் எடுத்தார்.
*. கடைசி ஐபிஎல் போட்டி : சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . சச்சின் 38 ரன்கள் எடுத்தார்.
*. கடைசி சாம்பியன்ஸ் லீக் போட்டி : ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் 15 ரன்கள் எடுத்தார்.
இத்துடன் நேற்று அவர் கடைசியாக விளையாடிய போட்டியிலும் அவரது அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சச்சின் 44 ரன்கள் எடுத்தார்.
இப்படி தான் கடைசியாக விளையாடிய எல்லா விதமான போட்டிகளிளும் வெற்றி பெற்று உள்ள சச்சினின் சாதனையை முறியடிக்க யாரவது உள்ளார்களா என்று எதிர்பார்த்து காத்திருப்போம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.