இன்று நடந்த விம்பிள்டன் இறுதி போட்டியில் 6-7,6-4,7-6,5-7,6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிக் பெடரரை வெற்றி பெற்றார். இந்த போட்டியில் ஜோகோவிக் வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் மனதை வென்றது என்னமோ ரோஜர் பெடரர் தான். 32 வயது ஆனவரை போல் ஆடாமல் ஒரு இளைஞ்ன் ஆடுவதை போல் ஆடினார். நீண்ட இடைவேளிக்கு பிறகு பெடரர் பழைய ஆட்டத்திற்கு மாறியது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 4 வது செட்டின் போதே ஆட்டம் முடிந்து விட்டது என அனைவரும் நினைத்த போது பெடரர் புயல் போல் வந்தார். 2-5 என்ற நிலையில் இருந்து 7-5 என்று 4 வது செட்டை வென்றார்.
இருந்தாலும் 5 வது செட்டில் ஜோகோவிக்கின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றார். ஜோகோவிக்கும் சிறப்பாக ஆடியதால் ஆட்டம் பரபரப்பாக சென்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பெடரர் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோற்றதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
ரோஜர் இன்று ஜெயிக்காவிட்டாலும் அனைவரையும் கவர்ந்த ரோஜா அவர் தான்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.