ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது நீண்ட நாள் காதலன் பிராட் பிட்டை திருமணம் செய்து கொண்டார். ஏஞ்சலினாவுக்கு ஏற்கனவே இருவருடன் திருமணம் முடிந்து விவாகரத்தும் முடிந்து விட்டது. ஏஞ்சலினா ஜோலியும் பிராட் பிட்டும் 2005 இல் வெளிவந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஸ்மித் படத்தில் நடித்த போது காதலில் மலர்ந்தார்கள். 2006 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலிப்பதை ஒப்புக் கொண்டார்கள். அப்போது அந்த ஜோடிகளின் முதல் குழந்தை ஏஞ்சலினா வயிற்றில் இருந்தது.அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினார்கள் , ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அதன் பிறகு இவர்களுக்கு 3 குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஏஞ்சலினா 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இப்போது அவர்களுக்கு மொத்தம் 6 குழந்தைகள். அவர்கள் இந்த ஜோடியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்கள். அதனால் இந்த மாதம் 23 ஆம் தேதி பிரான்ஸில் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு முக்கியமான நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். இது ஒரு ரகசிய திருமணத்தை போல் நடந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.