கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சினின் தீவிர ரசிகரா நீங்கள் ?? அவரைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியுமா ?? ஆம் என்றால் , கீழே உள்ள விஷயத்தைப் படித்து பார்த்து விட்டு உங்களுக்கு தெரியுமா , தெரியாதா என்று சொல்லுங்கள் .
1 ) சச்சின் முதலில் வேகப்பந்து வீச்சாளராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார் . அவர் எம்.ஆர்.எப் வேகப் பந்து வீச்சிற்கு பயிற்சிக்கு செல்லும் போது , ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான டென்னிஸ் லீல்லி அவரை பேட்டிங்கில் கவனம் செலுத்த சொன்னார் .
2 ) சச்சின் இரு கைகளிலும் வேலைகள் செய்யும் திறன் படைத்தவர் . அவர் வலது கையில் பேட்டிங் செய்வார் , இடது கையில் எழுதுவார் .
3 ) சச்சின் 1987 உலக கோப்பையின் போது பால் எடுத்து போடும் பால் பாயாக இருந்தார் . அடுத்த 2 வருடத்தில் இந்திய அணியில் விளையாட தொடங்கினார் .
4 ) சச்சினின் கடைசி ரஞ்சிப் போட்டியில் அவருக்கு கடைசி பேட்டிங் பார்ட்னராக இருந்தவர் தவால் குல்கர்னி . அவர் நவம்பர் 15 , 1989 ஆம் ஆண்டு பிறந்தார் . இந்த தேதி தான் சச்சின் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் .
5 ) சச்சின் 1988 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சப்ஸ்டுயுட் ஆக பீல்டிங் செய்தார் .
6 ) சச்சினின் பயிற்சியாளர் ராம்காண்ட் அர்சரேகர் பயிற்சியின் போது அவர் அவுட் ஆகாமல் இருந்தார் அவருக்கு ஒரு காயின் தருவதை வழக்கமாக வைத்து இருந்தார் . அது மாதிரி சச்சின் தன் பயிற்சியாளரிடம் இருந்து 13 காயின்கள் பரிசாக பெற்றுள்ளார் .
7 ) சச்சினின் முதல் டிவி விளம்பரம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேண்ட் எய்ட் .
8 ) சச்சின் தனது 22 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார் . அவரின் மனைவி அஞ்சலியை தனது 17 வது வயதில் இங்கிலாந்து தொடரில் இருந்து திரும்பி வரும்போது முதல் முறையாக விமான நிலையத்தில் பார்த்தார் .
9 ) சச்சின் தனது மகளுக்கு சாரா என்று பெயரிட்டதன் காரணம் , அவர் முதல் முதலாக கேப்டனாக இருந்து வென்ற தொடர் சஹாரா கோப்பை தொடர் .
10 ) சச்சின் தனது முதல் சதத்துக்காக மது ஒன்றை 1990 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் பரிசாக கொடுத்தனர் . இங்கிலாந்தில் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் மது அருந்த அனுமது இல்லாததால் அப்போது அதை அவர் அருந்த வில்லை . பின்னர் 8 வருடங்கள் கழித்து தனது மகளின் முதல் பிறந்த நாளுக்கு அதை அருந்தினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.