ஆனைமுகத்தோன் விநாயகரை போற்றி பல பாடல்கள் தமிழில் உள்ளன, விநாயகர் வழிபாடு என்பது நெடுங்காலமாக தமிழகத்தில் உள்ளது, விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் எப்போது வந்தது என்ற வரலாற்று தகவல்கள் பல்லவர்கள் காலத்தை காட்டுகின்றன.
சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்ம பல்லவரை தோற்கடித்து காஞ்சியை நாசம் செய்ததற்கு பழிவாங்குவதற்காக நரசிம்மவர்ம பல்லவர் வாதாபியின் மீது படையெடுத்து அந்நகரை தீக்கிரையாக்கி அழித்து இரண்டாம் புலிகேசியையும் கொன்றார். அந்த படைக்கு தலைமை வகித்து போர் புரிந்தவர் பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி ஆவார், பரஞ்சோதியாக மாறும் முன் விக்ரம கேசரி என்றழைக்கப்பட்ட இந்த தளபதி பல்லவ சேனைக்கு தலைமை தாங்கி வாதாபியை வெற்றிகொண்டு அழித்து பல்லவ தேசம் திரும்பிய போது வாதாபியில் இருந்து வாதாபி கணபதி என்ற விநாயகர் சிலையை கொண்டு வந்தார். அதிலிருந்து விநாயகர் வழிபாடு தமிழகத்தில் உருவானதாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சமண, பெளத்த மதங்கள் கோலோச்சிய போது குளக்கரைகளில் இருந்த மகாவீரர், புத்தர் சிலைகள் தான் களப்பிரர்கள் காலத்திற்கு பின் அந்த மதங்கள் செல்வாக்கிழந்து சைவ மதம் செழித்த போது விநாயகர் சிலைகள் ஆக மாற்றப்பட்டன என்றும் சொல்லப்படுகின்றது.
வீடுகளில் குழந்தைகளின் கொண்டாட்டமான மகிழ்ச்சியோடு அமைதியாக கொண்டாடப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி தான் சில மதவெறியர்களால் ஊர்வலம், மாற்று மதத்தினருக்கு எதிரான செயல்பாடுகள் என மதவெறி விழாவாக மாற்றப்படுகிறது.
நன்றி குழலி புருசோத்தமன்
https://www.facebook.com/kuzhalipuru
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.