நமது மொபைலில் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருக்கும் போது தீடிரென்று பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போனால் எப்படி இருக்கும் ?? மொபைல் போன்களில் எவ்வளவு விதமான புதிய வசதிகள் வந்தாலும் , இந்த சார்ஜ் மட்டும் ஒரு நாள் மட்டுமே நிற்கிறது . எனவே இப்போது நடந்து வரும் ஆய்வில் , ஆராய்சியாளர்கள் சர்க்கரை -பயோ பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர் .
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இப்போது உள்ள லித்தியம் -ஐயான் பேட்டரியை விட 10 மடங்கு அதிகமாக சார்ஜ் நிலைத்து இருக்கும் . இந்த பேட்டரியில் சர்க்கரையில் உள்ள இரசாயண ஆற்றல் , மின்சாரம் ஆக மாற்றப்படுகிறது .
மேலும் இந்த பேட்டரி இப்போதுள்ள லித்தியம் -ஐயான் பேட்டரியை விட விலை குறைவாகவே இருக்கும் . மேலும் இயற்கை பாதுகாப்பிற்கும் இந்த பேட்டரி துணை நிற்கும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.