செக்ஸ் நினைப்பும் செக்ஸ் நினைவுகளும் இல்லாதவர்களே இல்லை எனலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக சிலருக்கு செக்ஸ் உறவு கொள்வது பிடித்திருக்கலாம். இனப்பெருக்கத்திற்காகவும், ரிலாக்ஸ் ஆக ஆவதற்காக மட்டுமின்றி செக்ஸ் உறவானது பல விதங்களில் நன்மை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
பெண்களுக்கு செக்ஸ் மீது ஏன் ஆர்வம் உள்ளது என்று கண்டறிய நடைபெற்ற ஆய்வில் செக்ஸ் உறவை பெண்களுக்குப் பிடிக்க 237 காரணங்கள் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
Why Women Have Sex என்ற நூலில் டேவிட் பஸ் என்ற மனவியல் நிபுணர் இதற்கான காரணத்தை ஆராய்ந்து எழுதியுள்ளார். 1006 பெண்களை சோதனை செய்த இவர் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அதில் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான பதிலளித்துள்ளனர். இந்த பெண்களுக்கு செக்ஸ் பிடிக்க மொத்தம் 237 காரணங்களை கூறியுள்ளார்.
செக்ஸ் என்பது ஒரு த்ரில்லான அனுபவம் என்று கூறியுள்ளனர் சிலர். அதுபோன்ற திரில் அனுபவத்திற்காகவே அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனராம். தம்பதியரிடையேயான செக்ஸ் நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமின்றி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதனால் செக்ஸ் பெண்கள் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.
சில பெண்களுக்கு ஆணின் வாசனையால் செக்ஸ் மூட் ஏற்பட்டு உடல்உறவில் ஈடுபடுவதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் உடல்உறவில் ஈடுபடுவதானல் தனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர் சிலர்.
காதலும், செக்ஸ்சும் நீண்டகால இன்சூரன்ஸ் பாலிசி போன்றது பாதுகாப்பானது என்று சில பெண்கள் கூறியுள்ளனர். செக்ஸ் மூலம் உடல் ஆரோக்கியமடைகிறது. அழகான கூந்தல் கிடைக்கிறது, தோல் மினுமினுக்கிறது என்றும் அதனால் செக்ஸில் அதிக் ஆர்வம் காட்டுவதாக சிலர் கூறியுள்ளனர்.
செக்ஸ் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இது மைக்ரேன் தலைவலியை குணமாக்குவதோடு மனதை ரிலாக்ஸ் ஆக்குகிறது. இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மாதாந்திர உதிரப்போக்கு சமயத்தில் ஏற்படும் வலிகளை போக்குவதில் செக்ஸ் சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு செக்ஸ் சிறந்த நிவாரணியாக இருந்ததாக கூறியுள்ளனர். உறவுக்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதால் அதனை விரும்புவதாக கூறியுள்ளனர்.
உளவியல் நிபுணரின் ஆய்வின் படி ரஷ்யாவில் 73 சதவிகித பெண்கள் அதீத செக்ஸை விரும்புகின்றனர். ஜப்பானிய பெண்கள் 63 சதவிகிதம் பேரும், இங்கிலாந்தில் 75 சதவிகிதம் பேரும் செக்ஸில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் ஆண்கள் இந்த அளவிற்கு உற்சாகம் காட்டுவதில்லை. ஜப்பானில் 41 சதவிகிதம் ஆண்களும், ரஷ்யாவில் 61 சதவிகித ஆண்களும்தான் செக்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.
திருமணமான ஆரம்பத்தில் தொடங்கி நடுத்தர வயதை தாண்டிய பிறகும் செக்ஸ் தங்கள் விருப்பத்திற்குரியதாக இருக்க இதுபோன்ற 237 காரணங்களை பெண்கள் கூறியுள்ளதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் இந்த உளவியல் நிபுணர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.