மோடி அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைய உள்ளது . இந்நிலையில் மோடி அரசுக்கும் மற்ற அரசுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று பார்ப்போம்.
* எல்லா நாடுகளையும் நண்பர்களாக மதித்து வரவேற்கிறது மோடி அரசு.
* நமது தாய் நாட்டை நாம் தான் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் . அது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
* காஷ்மீர் பிரச்சனையை இப்போது கையில் எடுத்தால் அது பெரிய தவறாக மாறிவிடும் என்பதை புரிந்து கொண்டு, அது தொடர்பான பேச்சுகளை தவிர்த்தது.
* பெண்களை மட்டும் கண்டித்து வளர்க்காதீர்கள், ஆண்களை கண்டித்து வளருங்கள் என பெற்றோருக்கு அறிவுரை கூறினார்.
* நமது உணவு பாதுகாப்பு என்பது முக்கியமானது என்பதை வலியுறுத்தி வருகிறது.
* உயர் பொறுப்பில் இருப்பவர்களும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
* தங்களது உறவினர்களை அமைச்சர்கள் பி.ஏ. க்களாக வைத்துக் கொள்ள கூடாது என கட்டாய உத்தரவு போட்டது.
* நமது நாடு எந்த பிரச்சனை மற்றும் கலவரங்கள் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. மதம் தொடர்பாக எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது என்பதில் கவனமாக உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.