இணையத்தில் எப்போதும் ஹேக்கர்கள் தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது . ஒரு நாட்டிற்கு எதிரிகளிடம் இருந்து எந்த அளவுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதோ , அதே அளவு இந்த ஹேக்கர்களிடம் இருந்தும் அச்சுறுத்தல் இருந்து கொண்டு தான் இருக்கிறது .
இந்தியாவில் இந்த ஹேக்கர்களால் அதிகம் குறிவைக்கப்படுகிற இணையதளம் பாஜகவின் இணையதளம் மற்றும் பிரதமரின் அமைச்சக அலுவலக இணையதளம் .இதனை பாஜகவின் தொழில்நுட்ப குழுமத்தின் தலைமை அதிகாரி டில்லியில் நடந்த கலந்தாய்வு ஒன்றில் கூறினார் .
கடந்த ஐந்து மாதங்களில் ஹேக்கர்களால் 62,189 முறை பிரச்சனை ஏற்பட்டுள்ளது . மேலும் இந்தியாவின் 9,174 இந்திய இணையதளங்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.