இந்திய சார்பாக ஆசியாப் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்கில் பங்குபெற இருந்த வீரர் மீது பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவர் பூகார் கொடுத்துள்ளார் . அந்த வீரர் மற்றும் அவரது பயிற்சியாளர் இந்திரா காந்தி உள்ளூர் மைதானத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக பூகார் அளித்துள்ளார் .
மனோஜ் ரானா ( பயிற்சியாளர் ) மற்றும் சந்தன் பதக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . அவர்கள் இருவரும் நேற்று இரவு ஆசியாப் போட்டிகளில் கலந்து கொள்ள இன்சியான் செல்ல இருந்தனர் .
பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட அந்த வீராங்கனை இந்திய அணியில் இல்லை . அவர் குற்றவாளிகள் தன்னை மிகவும் பயமுறுத்தியதாகவும் , ஜிம்னாஸ்டிக் ஆணையம் தன்னுடைய பூகாரை இரண்டு வாரங்கள் தட்டிக் கழித்து வந்ததாகவும் பூகார் அளித்துள்ளார் . இந்த சம்பவம் செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.