செப்டம்பர் 17 , 1972 ஆம் ஆண்டு ஜியண்ட்ஸ் இன்டெர்னேஷனல் என்னும் அமைப்பு நானா சுதாசமாவால் தொடங்கப்பட்டது. நமது சமூகத்தில் நல்லது செய்வதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 35 ஆண்டுகளாக மக்களுக்காகவே உழைத்து வருகிறார்கள். சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் போது மக்களை காப்பாற்றுவதில் இவர்கள் பங்கு மிக முக்கியமானது ஆகும். பெண் குழந்தைகளை காப்பாற்றுவது, சுற்றுசூழலை பாதுகாப்பது முதலியவற்றிலும் இவர்கள் சிறப்பு பணியாற்றி வருகிறார்கள்.
இந்த அமைப்பு இந்தியாவில் 600 கிளைகளையும், அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் போன்ற நாடுகளிளும் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்த அமைப்பு சமுதாயத்தில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நபருக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி விளையாட்டு துறையில் சிறந்த விளங்கியதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு விருது வழங்க உள்ளார்கள். இந்த விருதை பாஜக வின் தலைவர் அமித் ஷா வழங்க உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.