BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 17 September 2014

கூகுளின் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!



கூகுள் தன்னுடைய ஹார்ட்வேர் பார்ட்னர்களுடன் இணைந்து மூன்று ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல்களை வெளியிட்டது . இந்த மொபைலை வெளியிட கூகுளின் சுந்தரம் பிச்சை டில்லி வந்து இருந்தார் . மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல்கள் இருக்கும் என கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது . அந்த ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல் குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ :

1 ) விலை குறைவு .

வெளிவந்துள்ள மூன்று மொபைல்களும் விலை குறைவாகவே உள்ளது .

ஸ்பைஸ் ஆண்ட்ராய்ட் ஒன் டிரிம் யுனோ - ரூ. 6,299
கார்பன் ஸ்பார்கல் வி                                           - ரூ. 6,399
மைக்ரோமேஸ் கேன்வாஸ் ஏ1                       -  ரூ. 6,499

2 ) ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் வாங்கலாம் .

இப்போது வெளிவருகிற மொபைல்கள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் . ஆனால் ஆண்ட்ராய்ட் ஒன் மொபைல்களை நீங்கள் இரண்டிலும் பெற முடியும் . ஸ்பைஸ் ஆண்ட்ராய்ட் ஒன் டிரிம் யுனோ மொபைலை பிளிப்கார்டிலும் , கார்பன் ஸ்பார்கல் வி மொபைலை ஸ்னாப்டிலிலும் , மைக்ரோமேஸ் கேன்வாஸ் ஏ1   மொபைலை அமேசான் இணையதளத்திலும் வாங்கலாம் .

3 ) மொபைல் அப்டேட்கள் :

இந்த மொபைலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அப்டேட்கள் அனைத்தும் கூகுள் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக வரும் . எனவே அடிக்கடி அப்டேட்களை எதிர்பார்க்கலாம் .

4 ) கூகுள் நகரும் ஷோரூம்கள் :

கூகுள் 20 நகரங்களின் 600 இடங்களில் வைபி வசதியுடன் கூடிய நகரும் ஷோ ரூம்களை அமைக்க உள்ளனர் . மேலும் இந்த மொபைலின் ஆலோசகர்களாக 30,000 பேரை கூகுள் நியமித்துள்ளது .

5 ) இந்தியாவிற்கு தான் முதல் ஆண்ட்ராய்ட் ஒன்  !!

கூகுள் நிறுவனம் இந்தியாவில் தான் தனது முதல் ஆண்ட்ராய்ட் ஒன்  மொபைலை வெளியிட்டுள்ளது . இந்த வருட முடிவிற்குள் இந்தோனேஷியா , பிலிப்பைன்ஸ் உள்ளீட்ட இடங்களில் இந்த மொபைலை வெளியிட திட்டமிட்டுள்ளனர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media