ரஷியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவை பலருக்கும் தெரியும். இவர் டென்னிஸ் ஆடும் திறமையை விட இவரது அழகுக்கு இருக்கும் ரசிகர்கள் அதிகம். இவர் தனது அழகின் மூலம் பிரபலமானவர். சச்சினை யார் என்றே தெரியாது என்று சொன்னதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர்.
இவர் பல்கோரியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் டிமிட்ரோவை காதலித்து வந்தார். இவரும் டென்னிஸ் வீரர் என்பதால் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. டிமிட்ரோவ் ஷரபோவாவை விட 4 வயது இளையவர். ஆனால் அது அவர்களுக்குள் பெரிய பிரச்சனையாக இல்லை. கடந்த 2012 ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்தார்கள். ஷரபோவா போட்டியின் போது டிமிட்ரோவ் வருவார், டிமிட்ரோவ் போட்டியின் போது ஷரபோவா சென்று பார்ப்பார். இருவரும் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோடி சேர்ந்து ஆட போவதாகவும் செய்திகள் வந்தன.
இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிய போவதாக செய்திகள் வந்துள்ளது. இருவரும் தங்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்காக பிரிய போவதாக செய்திகள் வந்துள்ளது. இது குறித்து அவர்கள் இருவரிடமும் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.