BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 17 September 2014

உலகில் டாப் 200 பல்கலைக்கழகங்களில் , இந்தியாவில் இருந்து ஒன்று கூட இடம் பெறவில்லை !!



கியு.எஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் டாப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட முதல் 200 இடங்களில் இடம்பெறவில்லை . ஐ.ஐ.டி பாம்பே 222 ஆம் இடம் பிடித்தது . ஐ.ஐ.டி டில்லி 235 ஆம் இடம் பிடித்து இருந்தது .

முதல் பத்து இடங்களில் அமெரிக்க மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் கல்லூரிகளே இடம் பெற்றிருந்தன . ஆசியா சார்பாக நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர் 22 ஆம் இடம் பெற்று இருந்தது .

மசாசுசட்ஸ் இன்ஸ்டிடுயுட் ஆப் டெக்னாலஜி தொடர்ந்து இரண்டாவது வருடமாக முதல் இடம் பிடித்தது . இரண்டாம் இடத்தை கேம்பிரிஜ் மற்றும் இம்பெரியல் பல்கலைக்கழகம் இரண்டும் பகிர்ந்து கொண்டுள்ளது . முதல் ஐந்து இடங்களில் 4 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது .

டாப் 200 பட்டியலில் 31 நாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்று உள்ளது . ஆனால் இந்தியாவில் இருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை என்பது சோகமான செய்தி .




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media