4 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ!
டில்லியில் ஒரு கருணாநிதி!
பின்னணியில் அன்னா ஹசாரே
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் ஈழத்தில் நடந்த போரை நிறுத்த கோரி நடத்திய 4 மணி நேர உண்ணாவிரத போராட்டம் மிகப்பிரபலமானது, அதை போன்றே ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ வினோத்குமார் பின்னியும் இன்று உண்ணாவிரதத்தை 4 மணி நேரத்தில் முடித்துக்கொண்டார்.
ஆம் ஆத்மி கட்சி பதவியேற்ற போது தனக்கு மந்திரி பதவி தரவில்லை என்று எம்.எல்.ஏ வினோத்குமார் பின்னி அர்விந்த் கெஜ்ரிவாலுடன் சண்டை போட்டார், அப்போதே கூட்டத்தை விட்டு வெளியேறி கட்சி தலைமையை விமர்சித்தார், இதற்காக ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்து ஆம் ஆத்மிம் கட்சியை விட்டு வினோத்குமார் பின்னியை நீக்கினார்கள்.
இதையடுத்து அர்விந்த் கெஜ்ரிவாலை பொய்யர் என்றும், சர்வாதிகாரி என்றும் விமர்சித்த பின்னி டில்லி மக்களுக்கு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்ற வேண்டும், டில்லியில் ஆப்ரிக்க பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட நள்ளிரவு ரெய்டுக்கு காரணமான சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளோடு உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
ஆனால் அதை நான்கு மணிநேரங்களிலேயே முடித்தவர் தான் அன்னா ஹசாரேவின் ஆலோசனையால் தான் உண்ணாவிரதத்தை நிறுத்தியதாகவும், 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது, எனவே ஆம் ஆத்மிக்கு எதிராக விழிப்புணர்வை உண்டாக்க போராடுமாறு கேட்டுக்கொண்டார் என்றார்.
ஆம் ஆத்மி கட்சி தனது கோரிக்கைகளை நிறைவேற்ற 10 நாட்கள் காலக்கெடு அளித்த எம்.எல்.ஏ பின்னி 10 நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் மீண்டும் பெரும் போராட்டத்தை தொடங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.