BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 August 2013

காதல் பஞ்சாயத்து - இயக்குனர் சேரன் மகள் தாமினி அரசு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்

காதல் பஞ்சாயத்து - இயக்குனர் சேரன் மகள் தாமினி அரசு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்.

இரண்டு நாட்களாக தமிழகத்தின் முரட்டு காதலை காண்பித்த பருத்திவீரன் அமீர், காதலித்தவர்கள் அவர்களாக பிரிந்தாலே தூக்குடா அவங்களை என்று காதலை வளர்த்த நாடோடிகள் படம் தந்த சமுத்திரகனி, நான் இப்போ என்ன செய்ய என்று பஞ்சாயத்துக்கு வந்த சீமான் என கோலிவுட்டின் அனைத்து காதல் இயக்குனர்களும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சேரன் வீட்டு காதல் பஞ்சாயத்தில் சொம்பை தூக்கிக்கொண்டு வந்து பஞ்சாயத்து செய்த போதும் சேரன் மகள் தாமினி, தான் தந்தை சேரனுடன் செல்ல விரும்பவில்லை என்றும் தான் மேஜர் என்பதால் காதலன் சந்துருவுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டார்.


மேஜர் ஆன பெண் வேறு யாரேனும் இப்படி கேட்டிருந்தால் காதலனுடன் அனுப்பி வைக்கும் காவல்துறையோ சேரன் மகள் தாமினியின் கோரிக்கையை மறுத்து அவரை அரசு காப்பகத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த காதலை எதிர்க்கும் சேரன் ஆரம்பத்திலிருந்தே பத்திரிக்கைகளிடமும் மற்றவர்களிடமும் தான் சாதி பார்க்கவில்லை, ஏழை பணக்காரன் பார்க்கவில்லை ஆனால் பையன் கேரக்டர் சரியில்லை என்று கூறுகிறார், ஆனால் தாமினி தரப்பு சொல்வது என்னவென்றால் தங்கள் காதலை சேரன் ஒத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு பணம் அந்தஸ்த்து வித்தியாசம் முக்கிய காரணம் என்கிறார். பணம் இருந்தா அவன் நல்லவன் ஆயிரம் தப்பு தெரிஞ்சி பண்ணாலும், பணம் இல்லைனா அவன் கெட்டவன் ஒரு தப்பு தெரியாம பண்ணாலும்,, எப்போ இந்த விதி மாறுமோ  என்று கூறுகிறார் தாமினி.

நவம்பர் மாதம் 2011ல் வெளிப்படையாக தாமினி-சந்த்ரு காதல் தெரிய ஆரம்பித்தது சில நாட்களுக்கு முன் சந்த்ருவை கோடம்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகில் ஓடவிட்டு தட்டியதால் பெரிதாகி தற்போது வெடித்துள்ளது.

இந்நிலையில் சந்த்ரு மீது வேறு பெண்கள் யாரேனும் விரைவில் ஏதேனும் புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

# படம் காட்டும் காதல் இயக்குனர்கள் எல்லாம் நிஜத்தில் காதலுக்கு வில்லன்கள் தான் போல‌


4 comments :

  1. இதில் சேரனை குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை... மேலும் இந்த காதல் திட்டம் போட்டு நடைபெற்ற ஒன்றாகவும் இருக்கலாம் ஏனெனில் 3 வருட காதல் அந்த பெண் 19 வயதை தொடும் வரை பொறுத்திருந்திருக்கிறார்கள் 16 வயதில் அந்த பெண் காதலிக்க தொடங்கியிருக்கிறாள் இது தவறு தானே... பருவமடையாத வயதில் வரும் ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாமே.. இதனை காதல் என்று சொல்லி காதலை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியமில்லை...

    ReplyDelete
  2. ini cheran KAATHALAI vaazha vaillum sinimakkalai edukka maattar thane?

    ReplyDelete
  3. காதல் உண்மை எனில் காத்திருக்களாமே?????
    வயதும் , காலமும் இருக்குதா‌னே!

    ReplyDelete
  4. any one can support easily as a third person.but as parents and brother you can not allow simply.when it happens to our own sister and daughter only we will know the real pain.it is their family matter none of us have right to support them.the girl is just crossing over teenage it can be also an infatuation.ask sandru to wait till she reaches 25,at that time she still loves him let them take decision with the acceptance of their parents.media should not interfere in this.parents have real pain.

    ReplyDelete

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media