நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கூறினார்.
நிதி உதவித் திட்டங்கள் எதையும் மாநில அரசு அறிவிக்கக் கூடாது. எந்தவித வாக்குறுதியும், புதிய திட்டங்கள், புதிய நிதி ஒதுக்கீடுகள் எதையும் அறிவிக்கக் கூடாது. அமைச்சர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் திட்ட அடிக்கல் நாட்டு விழாவிலோ அல்லது புதிய திட்டத் தொடக்க விழாவிலோ பங்கேற்கக் கூடாது. சாலை அமைத்துத் தருவதாகவோ, குடிநீர் உள்ளிட்ட இதர வசதிகளை செய்து தருவதாக வோ உறுதி அளிக்கக் கூடாது. அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிய நியமன ங்கள் மற்றும் தற்காலிக நியமனங்கள் எதுவும் செய்யக் கூடாது. அமைச்சர்கள், தங்களது அரசு அலுவல் பணிகளையோ, அரசு முறைப் பயணங்களையோ தேர்தல் பணிகளுடன் ஒன்றாக வைத்துக் கொள்ளக் கூடாது. அரசு இயந்திரங்களை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தவே கூடாது என்று அமைச்சர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு பற்றி கூறினார்.
அம்மா குடிநீர் பாட்டில்களில் முதல்வர் படம் இடம்பெறுவதை உடனே நிறுத்த வேண்டும். முதியோர் ஓய்வூதியம் வழங்குதல், 100 நாள் வேலைத் திட்டம் தொடரலாம் என்றும் அவர் கூறினார்.
ஓட்டுக்காக பணம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரவீன் குமார் தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.