இப்போது அமைந்து உள்ள அரசின் அமைச்சர்களை மக்கள்
இனி எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்றார் மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பிரகாஷ்
ஜவடெகர். அடுத்த வாரத்தில் இருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கான நடவடிக்கை
எடுக்கப்பட்டு உள்ளது என்றார். இதற்காக அவர்கள் பேஸ்புக் , டிவிட்டர் போன்ற சமூக
வலைதலங்களை பயன்படுத்த உள்ளார்கள். இதில் மக்களிடம் தங்கள் ஆட்சியை பற்றிய கருத்துகளை
கேட்பார்களாம். அதன் மூலம் தங்களின் தவறுகளை திருத்தி கொள்ளலாம் என்று
எண்ணுகிறார்கள். அந்தந்த துறைகளில் தங்கள் திட்டங்கள் , அதனை செயல்படுத்தும்
முறைகள் ஆகியவற்றை இதன் மூலம் மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இது ஒரு வழி
பேச்சாக இல்லாமல் இருவரும் பேசி கொள்வதாக இருக்கும். இதன் மூலம் மக்களின் குறைகளை
எளிதில் அறிந்து அதனை தீர்த்து வைக்கலாம் .
இதில் அனைத்து மொழிகளையும் சமமாக பார்பார்கள் .
ஹிந்திக்கு மட்டும் தனி முக்கியத்துவம் என்பது இருக்காது என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.