BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 24 June 2014

உயிரைக் காப்பாற்றிய வாட்ஸ்அப் !!!


இன்றைய அனைத்து இளைஞர்களிடமும் ஆன்ட்ராய்ட் மொபைல் உள்ளது . அந்த மொபைலில் கிட்டதட்ட அனைத்து இளைஞர்களிடமும் வாட்ஸ்ஸப் என்னும் அப்ளிகேஷன் இருக்கிறது .. அந்த  வாட்ஸ்ஸப் எப்படி ஒரு ஆணின் வாழ்க்கையை காப்பற்றியது என பார்க்கலாம் .

பிரியங்கா ஷர்மா (32) , கௌரவ் ஆரோரா (35) என்ற இருவரும் டில்லியில் இருந்து பெங்களூரில் வேலை செய்து வருகிறார்கள் . இருவரும் ஒன்றாக இணைந்து மலை ஏற்றத்தில் ஈடுபட்டனர் . இறங்கும் போது கௌரவ் சின்ன தவறினால் 300 அடியில் இருந்து பாறைகளில் இருந்து உருண்டு விழுந்தார் . இதனால் ஏற்பட்ட காயத்தினால் புதர்களுக்குள் மாட்டிக் கொண்டதால் அந்த இடத்தை விட்டு அவரால் நகர இயலவில்லை .

மொபைல் மூலம் பிரியங்காவை தொடர்பு கொள்ள முயன்றார் , ஆனால் இயலவில்லை . நெட்வோர்க் சரி இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை .  கௌரவ் தன்னுடைய நண்பருக்கு வாட்ஸ்ஸப் மூலம் அந்த இடத்தை போட்டோ எடுத்து அனுப்பினார் . அந்த போட்டோவின் உதவியுடன் அவரை கண்டுபிடித்தனர் .

இப்போது அவர் நலமாக உள்ளார் !!!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media