இன்று இலங்கை, கேகாலை மாவட்டத்திலுள்ள கொட்டியாகும்புர, குருனாகொட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பிரதேசத்தின் பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள அதேவேளை, இந்த பிரதேசத்திலுள்ள சிறிய புத்தர் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சித்தரிக்கும் முயற்சியும் பொதுபலசேனா உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுவதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே கொட்டியாகும்புர பிரதேச வாழ் முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையாகவும், அவதானமாகவும், நிதானமாகவும் செயற்படும்படி கேட்டுக் கொள்கிறோம். தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்.
இலங்கையின் பிரதான ஊடகங்கள் எல்லாமே உண்மையான செய்திகளை வெளியிட மறுத்த போது, நேற்று உங்கள் பிரார்த்தனைகளாலும், சமூக வலைத்தளங்களில் உடனடித் தகவல் பரிமாற்றங்களாலும், நிதானமான நடவடிக்கைகளாலும் மாவனல்லை பிரதேசத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
இன்றும் அவ்வாறே ஒற்றுமையாகவும், நிதானமாகவும் செயற்படுங்கள். வீண் கலவரங்களுக்குச் செல்ல வேண்டாம். நம் சகோதரர்கள் இலங்கையில் எப் பிரதேசத்திலேனும் ஏதேனும் துண்டுப் பிரசுரங்களைக் காண நேர்ந்தால் உடனடியாக புகைப்படம் எடுத்தோ அல்லது பிரதி எடுத்தோ எமக்கு அறியத் தாருங்கள்.
கொட்டியாகும்புர பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் உங்கள் குடும்பத்தார், நண்பர்களோடு எப்பொழுதும் தொடர்பிலேயே இருங்கள். ஏதேனும் பிரச்சினைகள் குறித்த அடையாளங்கள் தென்பட்டால் உடனே 0759700910-13 இந்த எண்ணுக்கு அழையுங்கள்.
நன்றி - எம்.ரிஷான் ஷெரீப்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.