நடிகை குஷ்பு சில நாட்களுக்கு முன் திமுக வில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார் . இந்த நிலையில் அவர் பாஜக வில் இணைவதற்காக தான் திமுக வில் இருந்து விலகியதாக செய்திகள் வந்தனர் .
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் , நான் எந்த கட்சியுலும் சேரப் போவதில்லை . அது குறித்த யுகங்களை விட்டுவிடுங்கள் . சில நேரங்களில் கஷ்டமான முடிவுகளை புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்ள வேண்டும் . எனக்கு இது உணர்ச்சிப் பூர்வமான நேரம் . எனது மகள்கள் தான் எனக்கு உலகம் . கொஞ்சநாள் குடும்பத்தோடு தனியாக இருக்க போகிறேன் . அதனால் பத்திரிக்கையாளர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் . திமுக தலைவர் எனக்கு தலைவராக மட்டும் இல்லாமல் தந்தையாகவும் இருந்தார் . அவர் மீது என் வாழ்க்கை முழுவதும் மரியாதை வைத்து இருப்பேன் . அந்த உணர்வை யாரும் நீக்க முடியாது என்று தெரிவித்து இருந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.