BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 July 2014

புகை பழக்கத்தை தடுக்க சீகரெட்டுகளின் விலையை உயர்த்தும் மத்திய அரசு !!



மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் ஹர்ஷ வர்தன் . இவர் சில தினங்களுக்கு முன் , நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதி இருந்தார் . அந்த கடிதத்தில் இளைஞர்கள் பலர் புகையிலை பிடிப்பதால் உயிரை இழக்கின்றனர் . இதனால் இந்த பொருட்களை எளிதில் வாங்க முடியாத வகையில் விலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்து இருந்தார் . இதன்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார் .

அந்த கடிதத்தில் , " நாட்டில் இளைஞர்கள் மத்தியில் புகையிலை பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது . 10 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பயண்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 8 கோடியாக இருந்தது , இப்போது இது 10 கோடியாக உயர்ந்துள்ளது . இதனால் இவர்களுக்கு ஏற்படும் நோய்களால் இவர்களுக்கு மருத்துவச் செலவு 1.4 லட்சம் கோடி வரை செலவாகிறது . எனவே இந்த பழக்கத்தை குறைக்க விலையை உயர்த்த வேண்டும் . புகையிலை பொருட்களுக்கு 50 சதவீத வாட் வரியை அமல்படுத்த வேண்டும் . ராஜஸ்தானில் மட்டும் 60 சதவீதம் இருக்கிறது . அதுபோல அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும் " என கடிதத்தில் எழுதியுள்ளார் .

இந்த கோரிக்கையை அனைத்து முதல்வர்களும் ஏற்று செயல்படுத்தினால் புகையிலை பயன்பாடு குறையும் வாய்ப்புள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media