மாற்று திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் இந்தியா சார்பாக போட்டியிட இருந்தவர் சச்சின் சௌதரி . இவர் தன்னுடைய தந்தையில் உடல்நிலை சரியில்லாததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தனர் . ஆனால் இப்போது அவர் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற உண்மை கசிந்து உள்ளது . இதை எதற்காக தந்தையின் உடல் நிலை சரியில்லை என்று மறைக்க முயன்றனர் என்பது தெரியவில்லை .
அந்த மாற்று திறனாளிகள் அணியில் இருந்த ஒருவர் கூறுகையில் , " ஆம் , அவர் தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியது உண்மை . இந்த சோதனை தேசிய போதை ஒழிப்பு மையத்தால் ஒரு மாதத்திற்கு முன் நடத்தப்பட்டது . அவர் வெளியேறியது ஒரு துயரமான சம்பவம் " என்றார் .
சச்சின் சௌதரி ஒரு அனுபவம் வாயந்த பளுதூக்குதல் வீரர் . இந்த முறை பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.