2013 ஆண்டு கூகுள் தேடுதளத்தில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர் பட்டியலில் இளைய தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , தல அஜித் என அனைவரையும் முந்தி விட்டார். விஜய்க்கு அடுத்த இடத்தில் ரஜினி, மகேஷ் பாபு ,பவண் கல்யான், அஜித் ஆகியோர் உள்ளனர். விஜய்யின் இந்த அதிரடி முன்னேற்றத்திற்கு காரணம் தலைவா படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை அதிக நபர்களால் தேடப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் பேஸ்புக், டிவிட்டர் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.
பாலிவுட்டை பொருத்தவரை அதிகம் தேடப்பட்ட நடிகராக சல்மான் கானும், அதிகம் தேடப்பட்ட நடிகையாக கத்ரினா கைஃபும், அதிகம் தேடப்பட்ட படமாக சென்னை எக்ஸ்பிரஸும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதிகம் தேடப்பட்ட கவர்ச்சி நடிகையாக சன்னி லியோன் உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.