ஆந்திராவில் பவர்ஸ்டார் பவண் கல்யான் என்றால் மாஸ் ஹீரோ. ஆனால் அதுவே தமிழகத்தில் பவர்ஸ்டார் என்றால் அது காமெடி ஹீரோ தான். அது வேறு யாரும் இல்ல நமது பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் ஒரு அக்குபஞ்சர் டாக்டர். இவர் எதற்காக நடிக்க வந்தார் என்று பலருக்கும் தெரியவில்லை. இவர் நடிக்கும் படங்களை இவர் மட்டும் தான் பார்ப்பார், அந்த அளவுக்கு இருக்கும் . இவர் நடித்த லத்திகா திரைபடத்தை இவரது திரையரங்கில் 300 நாட்கள் ஒடவிட்டார்.
சந்தானத்துடன் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அதிக பேருக்கு தெரிய வந்தார். இப்போது இவர் பேஸ்புக்கிற்கு வந்து விட்டார். இன்று தான் வந்தார். அது குறித்து வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே டிவிட்டரில் ஆட்டம் காட்டி கொண்டு இருந்த பவர்ஸ்டார் இப்போது பேஸ்புக் வந்து விட்டதால் இனி பேஸ்புக் நண்பர்களுக்கு ஜாலி தான்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.