நடிகர் சூர்யாவுக்கு இன்று பிறந்த நாள். அவர் தற்போது நடித்து வெளிவர இருக்கும் படம் அஞ்சான். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சூர்யாவின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நடிகர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் ஸ்டைலில் பேசினார்.
சூர்யா வளர வளர அவரது அப்பா சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் போல என கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். பின்பு அவர் அதற்கு விளக்கம் கொடுத்தார். சினிமாவில் அடக்கம், அமைதி, பணிவுக்கு பெயர் போனவர் சிவகுமார். அந்த விஷயத்தில் சிவகுமாரை சூர்யா முந்தி விடுவார் என்பதால் சிவகுமாரின் பெயரை சூர்யா கெடுத்து விடுவார் என கூறினார்.
சூர்யாவிற்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.